பி.வி. சிங் – “மண்டல் கமிஷன் நாயகனின் சிலை திறப்பு”

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலையை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சமூக நீதிக்காவலர் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சென்னையில் அவரது திருவுருவச் சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அந்த வகையில், தமிழக அரசின் சார்பில் சுமார் ரூ.52 லட்சம் மதிப்பில் இவரது உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் குடும்பத்தினர் மற்றும் தமிழக அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர் அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்து சிறந்த முதல்வராகத் திகழ்ந்தார். பிரதமராக இருந்த போது, தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்ட இவர் தமிழக மக்களுடன் பிற மாநில மக்களையும் நேசித்தார். இதுமட்டுமின்றி, பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு கடும் தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் எனச் சட்டத்தைக் கொண்டு வந்த பெருமையும் இவரையே சேரும்.
கலைஞர் கருணாநிதியால் “மண்டல் கமிஷன் நாயகன்” என்று புகழப்பட்ட  இவர் புற்று நோய், சிறுநீரக கோளாறு ஆகியவற்றால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி காலமானார்.