கொங்கு  நாட்டின் அடையாளம்  ‘கதர் ஆடைகள்’ –  பன்முக கலாச்சார விழாவில் நல்ல. ஜி.பழனிசாமி 

என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில் எத்னோஸ் -2k24 எனும் தலைப்பில் பன்முக கலாச்சாரம் விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக என். ஜி. பி. கல்வி குழுமத்தின் தலைவர் நல்ல. ஜி.பழனிசாமி தலைமை வகித்து நிகழ்வைத் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், இது மாணவர்களின் திருவிழா,  நாட்டு மக்களான நாம் பன்முகத்தன்மையுடன் பலவிதமான கலாச்சாரம், வாழ்க்கை முறைகளுடன் வாழ்ந்து வருகிறோம். அதன் வகையில், எத்னோஸ் ஆனது  பல்வேறு கலாச்சார தனித்துவத்தை வெளிப்படுத்தும் நோக்கில் நிகழ்வை மாணவர்கள் மன்றம் நடத்துகின்றனர். கல்வி பயிலுகின்ற காலத்தில் கல்வியோடு அவரவர்களின் தனித்துவமான கலாச்சாரத்தை விட்டு விடாமல் பின்பற்றி மாணவர்கள் வாழ்வில் உயர வேண்டும் என்றார். மேலும், கொங்கு  நாட்டின் சிறப்பு அடையாளமான கதர்  ஆடைகள்.  மாணவர்களும் பாரம்பரிய வேஷ்டி, சேலைகளை அணிந்து வந்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.

நிகழ்வில் பரதநாட்டியம்,  திருவாதிரை ஆட்டம், படுகர் ஆட்டம் உள்ளிட்ட  கலாச்சார நடனத்திறனை  மாணவர்கள் மிக உற்சாகமாக வெளிப்படுத்தினர்.

இதில் கல்லூரி செயலாளர் தவமணி தேவி பழனிசாமி, இயக்குநர் மதுரா வி பழனிசாமி, கல்வி இயக்குநர் முத்துசாமி,  கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் முனைவர் ஓ.டி.புவனேஸ்வரன் முதல்வர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றார்.