இரண்டாம் கட்ட காடுகள் வளர்ப்பு திட்டம் துவக்கம்

கோவை டைடல் பார்க்கில் இரண்டாம் கட்ட நகர்ப்புற காடுகள் வளர்ப்பு  திட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்திகுமார்  முன்னிலையில் துவங்கியது.

கோவை எல்காட் ஐடி பார்க்கில் முதல்கட்ட திட்டத்தில்  25 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இரண்டாம் கட்ட திட்டத்தில் 20,000 மரக்கன்றுகள்  நடப்பட்டன. நகர்ப்புற காடுகளை வளர்த்து, இழந்த பசுமையை மீட்பதே இதன் நோக்கமாக அமைகிறது.

நிகழ்விற்கு எல்காட் நிர்வாக அதிகாரி தனலட்சுமி கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார். மேலும், ரவுண்ட் டேபிள் ஆப் இன்டியா 7-ம் பகுதி முன்னாள் தலைவர் அஸ்வின்குமார், சுற்றுச்சுழல் மகளிர் பிரிவு தலைவர் மணிஷ் வியாஸ், திட்ட பிரதிநிதி தலைவர், ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் ரோஹிணி சர்மா, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலர்  நிகழ்வில் பங்கேற்றனர்.