கூட்டுறவு சங்கங்களில் 2257 உதவியாளர் பணியிடங்கள்…தேர்வு தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில்  2257 உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான   எழுத்து தேர்வு டிசம்பர் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ்  நகர கூட்டுறவு வங்கி பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் விற்பனையாளர் சங்கம், கூட்டுறவு பண்டகசாலை,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதில்  தற்போது 2257 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு  அறிவிப்பு கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்து இருக்க வேண்டும். ராணுவத்தில் பணி புரிந்தவர்கள், ராணுவத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்பு முடித்து இருந்தால் விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு பயிற்சியை பொறுத்தவரை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவு பயிற்சி,

சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் மேலாண்மை பயிற்சி (Higher Diploma in Cooperative Management) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இது குறித்த விரிவான விவரங்கள் தேர்வு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன. அதில் விண்ணப்பதாரர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

கூட்டுறவுப் பயிற்சியைப் பொருத்தவரை தமிழ்நாடு ஒன்றிய கூட்டுறவு மூலம் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவு பயிற்சி, சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் மேலாண்மை பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

இந்த பணியிடங்களுக்கு 18 வயதிற்கு மேற்பட்டோர் விண்ணப்பம் செய்யலாம். இதர வகுப்பினர் (OC ) அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஆதிதிராவிடர், பட்டியலின பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளது.  அதன் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 24ஆம் தேதி நடைபெறும்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையதளம் வாயிலாக டிசம்பர் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.