பி.எஸ்.ஜி. மருத்துவமனை சார்பில் தூய்மை பணியாளர்களுக்குச் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி மற்றும் பி.எஸ்.ஜி. மருத்துவமனை இணைந்து கிழக்கு மண்டலத்தில் பணியாற்றும் 1000 தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி இயக்குநர் புவனேஸ்வரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, மருத்துவ பரிசோதனையைப் பார்வையிட்டார்கள்.

இதில் துணை மேயர் வெற்றி செல்வன், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், பொதுச் சுகாதார குழு தலைவர் மாரி செல்வன், பொது மேலாளர் லோகநாதன், நகர்நல அலுவலர் தாமோதரன், உதவி நகர்நல அலுவலர் வசந்த்திவாகர், உதவி ஆணையர்கள் நூர்அகமது, செந்தில்குமார், மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் அரவிந்த், ஜெரால்டு சத்யபுனிதன், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.