கே.பி.ஆர் பெண் பணியாளர் கல்வி பிரிவின் 10வது பட்டமளிப்பு விழா

கே.பி.ஆர் குழும நிறுவனங்களின் சார்பாக கே.பி.ஆர் பெண் பணியாளர் கல்வி பிரிவின் 10வது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை தெக்கலூரில் உள்ள கே.பி.ஆர் மில் நிறுவனத்தின் ஒரு அங்கமான குவாண்டம் நிட்ஸ்-ன் மூன்றாவது யூனிட்டில் நடைபெற்றது.

 

இந்நிகழ்விற்கு டெல்லி அரசின் பொதுப்பணி, வணிகவரி மற்றும் குடிநீர் வாரியத்தின் முதன்மை செயலாளர் அன்பரசு, சைமாவின் முன்னாள் தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆறுமுகம் மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறை துணைத்தலைவர் சுஜித் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார்.

மேலும் கே.பி.ஆர் மில் நிறுவனங்களின் செயல் இயக்குனர்கள் சக்திவேல், ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் 405 மாணவிகள் பட்டம் பெற்றனர்.