கூடுதலாக 7 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை

மகளிர் உரிமத்தொகை கூடுதலாக 7 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட உள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தின் கீழ்  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த திட்டத்தினை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ம் தேதியன்று தொடங்கி வைத்தார்.

இதற்கிடையில், மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில், மேல் முறையீடு செய்யப்பட 11.85 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதில், 7 லட்சம் பேருக்கு  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.