கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட வானதி சீனிவாசன் நிகழ்ச்சியில் பங்கேற்பு

கோவை மக்கள் சேவை மையம் நடத்தும் “மோடியின் மகள்” எனும் தலைப்பில் தந்தையை இழந்த அன்னையின் அரவணைப்பில் வளரக்கூடிய 100 பெண் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன். கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு அவர் பொது விழாவில் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது.