புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குங்கள்!

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பயோமெடிக்கல் துறை சார்பாக பயோட்ரான்ஸ் -2023 எனும் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பூபதி சக்திவேல் பிரசாந்த் மெடிக்கல் டெக்னாலஜி கருத்தரங்கை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார், மேலும் வேலை வாய்ப்பு எவ்வாறு உள்ளது அதற்கான கல்வி முறை குறித்து உரையாற்றினார்.

கருத்தரங்கின் விழா மலரை பூபதி சக்திவேல் வெளியிட கல்லூரியின் முதல்வர் ஜெயா பெற்றுக் கொண்டார். இக்கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்களது கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மேலும் வினாடி வினா,சுய கண்டுபிடிப்பு கண்காட்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி திறன் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் துறைத் தலைவர் முனைவர் சரவண சுந்தரம் வரவேற்புரையாற்றினார். கருத்தரங்கை கல்லூரி முதல்வர் ஜெயா முன்னிலை வகித்தார். இக்கருத்தரங்கு ஏற்பாடுகளை பயோமெடிக்கல் துறை ஆசிரியர் தீபா ராணி கவனித்துக் கொண்டார்.