தடைகளை வாய்புகளாக பாருங்கள் – சுதா சேஷய்யன் பேச்சு

பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் நிறுவன தின விழா, பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி கலையரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செவிலியர் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் ஜெயசுதா வரவேற்புரை வழங்கினார். மேலும், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிய அனைவரின் கடின உழைப்பையும் , ஆதரவையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தார்.

பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன், அவர்கள் விழாவிற்கு தலைமை வகித்து, பேசுகையில், பி.எஸ்.ஜி செவிலியர்‌ கல்லூரியானது 28 மாணவர்களை கொண்டு 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது‌. மகத்தான செவிலியர் துறையில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று முடிவு செய்து தொடங்கப்பட கல்லூரி. இளநிலை, முதுநிலை பிரிவில் 460 மாணவர்கள் பயில்கின்றனர். மேலும், நர்சிங் கல்வியில் பிஎச்.டி பட்டப் படிப்பை வைத்திருப்பது மிக முக்கிய சாதனையாக பார்க்கிறோம் என்றார்.

நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக, பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களான வள்ளியம்மாள் (B.Sc (N) 1995 – 1999), சிவபாலன்‌ (B.Sc (N) 1996 – 2000) மற்றும் ஜமுனா ராணி (B.Sc (N) 1997 – 2001) ஆகியோருக்கு சிறந்த முன்னாள் மாணவர் விருது -2023″ வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர் டாக்டர் சுதா சேஷய்யன், தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேசுகையில், இளமையின் தொடக்க காலத்தில் இருக்கும் மாணவர்கள் செவிலியர் துறையின் முக்கிய அம்சங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். சமூக சேவை பணியில் செவிலியர் பணி‌ இன்றியமையாத ஒன்று. தடைகளை வாய்புகளாக பாருங்கள் நிச்சயம் வாழ்வில் வெற்றி பெற உதவும் என்று மாணவர்களுக்கு அறிவுருத்திய அவர், செவிலியர் பணி‌ தொடங்கிய முதல் நாளில் இருந்தே பெண்களின் பங்களிப்பு மேன் மேலும் வலுவடைந்து வருகிறது என்றார்.