விமான சேவையை அதிகரிக்கும் ஏர் இந்தியா!

அடுத்த 6 மாதங்களில் 400-க்கும் மேற்பட்ட வாராந்திர விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் நடைமுறைப்படுத்த உள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான குளிர்கால அட்டவணையின் ஒரு பகுதியாக, மார்ச் 2024 வரை உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் வாரத்திற்கு 400 விமானங்களை இயக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது என்று டாடா குழுமத்திற்கு சொந்தமான விமான நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தனது உள்நாட்டு நெட்வொர்க்கை வலுப்படுத்தும் நோக்கில், வரவிருக்கும் மாதங்களில் 200க்கும் மேற்பட்ட வாரந்திர விமான சேவைகள் நடைமுறைக்கு வரும். மேலும், மும்பை மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களின் வழிதடம் வழியாக இந்த விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதற்கிடையில், பெங்களூரு-சிங்கப்பூர், கொச்சி-தோஹா, கொல்கத்தா-பாங்காக் மற்றும் மும்பை-மெல்போர்ன் உள்ளிட்ட நான்கு புதிய வழித்தடங்களில் விமான சேவையை தொடங்கியுள்ளது.