“நடப்போம் நலம் பெறுவோம்” நடைபயணம் நாளை தொடக்கம்!

கோவை ரேஸ்கோர்ஸ் ஈஸ்ட் கிளப் ரோட்டில் “நடப்போம் நலம் பெறுவோம்” எனும் தலைப்பில் நடைபயணம் சனிக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, 10,000 ஆயிரம் அடிகள், அதாவது 8 கி.மீ.நடப்பதால் நீரழிவு மற்றும் இரத்த அழுத்த நோய்கள் 28 சதவிகிதமும், இதய நோய்கள் 30 சதவிகிதமும் குறைகிறது என்று அறியப்படுகிறது.

அதன் நோக்கில், “நடப்போம் நலம் பெறுவோம்” நடைப்பயணமானது, பொதுமக்கள் நலன் மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம், “நடப்போம் நலம் பெறுவோம்” நிகழ்ச்சியை, கோவை ரேஸ்கோர்ஸ் ஈஸ்ட் கிளப் ரோட்டில், சனிக்கிழமை ( 4-11-2023 ) காலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

இந்த நடைப்பயிற்சியானது,கோவை ஈஸ்ட் கிளப் ரோட்டில் தொடங்கி, திருச்சி சாலை – GH சிக்னல் – வாலாங்குளம்(முழுசுற்று) – GH சிக்னல் – திருச்சி சாலை – வெஸ்ட் கிளப் ரோடு – ரேஸ்கோர்ஸ் முழு சுற்று – ஈஸ்ட் கிளப் ரோட்டில் 8 கி.மீ.தூரத்தில் முடியும் வகையில் நடைபாதை ஆரோக்கியமான நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்துக் கழக நிர்வாகிகள், மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள்,மகளிர் என அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.