இந்தியாவில் தென்படும் சந்திர கிரகணம் 

இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை நிகழவிருக்கிறது. இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தைக் காணலாம்.

சூரியன், பூமி, நிலவு ஆகிவை ஒரே நேர்க்கோட்டுப் பாதையில் வரும்  நாளை சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம். பவுர்ணமி நாளில், நிலவு மீது விழக்கூடிய சூரியனின் ஒளியானது பூமியை முழுவதுமாக மறைத்தால் முழு சந்திர கிரகணம், பகுதியாக மறைத்தால் பகுதி சந்திர கிரகணம்.

அந்த வகையில், இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நாளை (அக்டோபர் 29) நள்ளிரவு 1.05 மணி முதல் அதிகாலை 2.24 மணி வரை நிகழ்கிறது. இது பகுதி சந்திர கிரகணம் ஆகும்.  இந்த சந்திர கிரகணம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தெரியும்.  சூரிய கிரகணத்தைப் போல் இல்லாமல், சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.  இந்தியா மட்டுமின்றி, ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலும் சந்திர கிரகணம் தெரியும்.

சந்திர கிரகணத்தையொட்டி தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் முக்கிய வழிபாட்டுத் தளங்களில் இன்று இரவு நடை  அடைக்கப்பட்டு நாளை அதிகாலை சிறப்புப் பூஜைகள் நடக்கும் என கோவில் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.