ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனம் சார்பில் வாக்கத்தான்

கோவையில் ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனம் சார்பில் ‘ஃபிட் இந்தியா ப்ரீடம் ரன்’ என்ற தலைப்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனத்தின் கோவை மண்டல அலுவலகம் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

‘ஃபிட் இந்தியா ப்ரீடம் ரன்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியில் காப்பீடு நிறுவன ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவை அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி ரேஸ்கோர்ஸ் முதல் பேரணியை மேற்கொண்டனர்.

ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர்கள் சுரேஷ்குமார் , ரவி ஆகியோரது தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கத்தானில் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் உடலை பொருத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.

நிகழ்ச்சியை துணை மேலாளர் அஜய் பரத் ஒருங்கிணைத்தார்.