சர்வதேச ரோபோடிக் போட்டியில் சச்சிதானந்த பள்ளி முதலிடம்

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியின்  ரோபோடிக் அணி சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் சச்சிதானந்த பள்ளியிலிருந்து எக்ஸ்ப்ளோரர் பிரிவில் இரண்டு அணிகளும், ஸ்டார்டர் பிரிவில் இரண்டு அணிகளும் கலந்து கொண்டன.

எக்ஸ்புளோரர் பிரிவில் 24 அணிகள் பங்கேற்ற போட்டியில் சச்சிதானந்த ஜோதி நிகதன் பள்ளியின் இரண்டு அணிகளும் கூட்டாக முதல் இடத்தைப் பெற்றன. ஸ்டார்டர் பிரிவில் 32 அணிகள் பங்கேற்ற போட்டியில் சச்சிதானந்த ஜோதி நிகதன் அணியினர் 5 மற்றும் 6வது இடங்களைப் பெற்றன.

இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, பிலிப்பைன்ஸ், லெபனான், தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் மெக்சிகோ ஆகிய 7 நாடுகளில் இருந்து பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 72 அணிகள் பங்கேற்றன.