சாரதாம்பாள் கோவிலில் ‘வித்யாரம்பம்’ கொண்டாட்டம்

விஜயதசமியை முன்னிட்டு ரேஸ் கோர்ஸ்ஸில் அமைந்துள்ள சாரதாம்பாள்  கோவிலில் வித்யாரம்பம் கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெற்றோர்கள்  தங்களது குழந்தைகளை அழைத்து வந்து எழுத்தறிவித்தனர்.

விஜயதசமியன்று 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அறிவின் உலகிற்கு அறிமுகப்படுத்தும் ‘வித்யாரம்பம்’ என்ற சடங்கு நடைபெறுவது வழக்கம். இந்த சடங்கின்போது குழந்தைகளை அரிசி தட்டில் தங்கள் தாய்மொழியின் எழுத்தையோ, தெய்வங்களின் மந்திரத்தையோ எழுத வைப்பர். அதோடு நெல் அல்லது தங்கத்தைக் கொண்டு குழந்தையின் நாவில் எழுதுவார்கள். இதனால் குழந்தைகளின் அறிவு மேம்படும் என்று நம்புகின்றனர்.

குழந்தைகள் தங்களது கல்வி பயணத்தை தொடங்கும் விழாவான வித்யாரம்பம் கோவையில் பல்வேறு கோயில்களில் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சாரதாம்பாள்  கோவிலில் விமர்சையாக வித்யாரம்பம் கொண்டாடப்பட்டது.