நிச்சயம் அஜித்தை வைத்து படம் இயக்குவேன் -இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில்  ‘லியோ’ படம் அக்டோபர் 19-ஆம் தேதியில் வெளியாகும் நிலையில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய லோகேஷ் கனகராஜ், லியோ படம் குறித்தும் தன் அடுத்த இலக்கு குறித்தும் மனம் திறந்துள்ளார்.

லியோ படம் வெளிவருவதற்கு முன்னதாகவே படம் தொடர்பான பல சர்ச்சைகள் எழுந்தன. படத்தின்  இசை வெளியீடு ரத்து, நடனக் கலைஞர்கள் ஊதிய புகார், ட்ரைலரில் விஜய் பேசிய ஆபாச வசனம், அதனை சென்சார் செய்யாமல் திரையரங்கில் திரையிட்டது மேலும், திரையரங்கில் ரசிகர்களின் கொண்டாட்ட செயல் எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது லியோ.

இந்நிலையில், விஜய் படம் என்றாலே பிரச்னைகள் வரக்கூடும் என்று செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய லோகேஷ் கனகராஜ், “விஜய்க்கும் எனக்கும் புரிதல் நன்றாக உள்ளது. லியோ படத்துக்கு எந்த பிரச்னைகள் இல்லை” என்றவர்., லியோ ஆக்ஷன் படம்தான், வன்முறையை தூண்டும் படம் இல்லை என்றார்.

மேலும், நடிகர் அஜித்குமாரை வைத்து  நிச்சயம் படம் பண்ணுவேன், கூடிய விரைவில் நடந்தால் மகிழ்ச்சி என்று தன் விருப்பத்தை தெரிவித்தார்.