விஜய் சேதுபதியின் நியூ லுக் ! எந்த படத்திற்காக இப்படி ஒரு தோற்றம்?

கோலிவுட்டில் ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என அனைத்து வேடங்களிலும் எந்தவித பந்தாவும்  இல்லாமல் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. ஒரு வருடத்தில் டஜன் கணக்கில் படங்களில் நடிக்கும் விஜய் சேதுபதியின் நியூ லுக் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியாக படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் மக்கள் செல்வனுக்கு தமிழில் மட்டுமில்லாமல் பிறமொழியிலும் படவாய்ப்புகள் குவிந்துகொண்டே வருகிறது. சமீபத்தில் வெளியான ‘ஜாவான்’ படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து பாலிவுட்டில் மாஸ் காமித்தார் விஜய் சேதுபதி. இப்படி பெரிய ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து ஹிட் கொடுத்து வரும் விஜய் சேதுபதி மிஷ்கின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் சென்னை மைலாப்பூரில் இயக்குநர் அமீர் புதிய உணவகம் ஒன்றை துவங்கியுள்ளார். இதன்  விழாவுக்கு வருகை தந்த மிஸ்கின் மெல்லிய மீசை மற்றும் கண்ணாடி என முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். சார்லின் சாப்ளின் போன்று இருக்கும் இந்த கெட்அப் மிஷ்கின் இயக்க உள்ள படத்துக்காக இருக்கோமோ என சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மிஸ்கின் இயக்க உள்ள படத்தில்  பிரபல நடிகர் ஜெயராம் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.