சாய் சில்க்ஸ் கலா மந்திர் விற்பனையகத்தை துவக்கி வைத்தார் சுருதிஹாசன்!

கோயம்புத்தூரில் சாய் சில்க்ஸ் கலா மந்திர் தனது 56-வது விற்பனையகத்தை திங்கள்கிழமை தொடங்கியது.

பங்குச் சந்தை பட்டியலில் இடம்பெற்ற  சாய் சில்க்ஸ் கலா மந்திர் பாரம்பரியமிக்க ஆயத்த ஆடைகளை விற்பனை செய்து வருகிறது. அடுத்த மூன்று நிதி ஆண்டுகளில் 30 புதிய பல்வேறு வகையான விற்பனையகங்களை துவக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், தென் இந்தியாவின் முன்னணி நடிகையான சுருதிஹாசன் கோவை 100 அடி ரோட்டில் சாய் சில்க்ஸ் கலா மந்திரின் 56-வைத்து  விற்பனையாகத்தை துவக்கி வைத்தார். இங்கு,  உயர்தர வடிவமைப்புகள் கொண்ட பனாரசி,  காஞ்சிபுரம், பட்டோலா, ஐகாட்,  ஆர்கன்சா மற்றும் குப்பம் வகை சேலைகள் இடம்பெற்றுள்ளன.

சாய் சில்க்ஸ் கலாமந்திர் லிமிடெட் முதன்மை நிர்வாக இயக்குநர் பிரசாத், சாலவாடி கூறுகையில், ” வெற்றிகரமான பங்கு வெளியீட்டிற்குப் பிறகு ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் எங்களது விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் எங்களது வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த, கோவை போன்ற நகரங்களில் விற்பனையாகங்களை  துவக்கி வருகிறோம். நேற்று எங்களது 55 – வது ஷோரூம் கோவை ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் பிரபல திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை வாங்கும் திறன் கொண்ட நகரமாகக் கோவை உள்ளது. மிக வேகமாக வளர்ச்சி பெறும் இரண்டாம் நிலை நகரங்களில் ஒன்றாக உள்ளது. கல்வி, மருத்துவம், உற்பத்தி போன்றவை சிறந்து விளங்குகிறது,” என்றார்.