பொறியியல் கல்லூரிக்கு இடையிலான பூப்பந்து போட்டி!  

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மண்டல அளவிலான பூப்பந்து போட்டி குமரகுரு கல்லூரியில் அண்மையில்  நடந்தது.

இருபாலினர்களுக்காக  நடைபெற்ற போட்டியில் , பெண்களுக்கான   இறுதி சுற்றில் எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியுடன் அரசு தொழில்நுட்ப கல்லூரி மோதியது.

இதில்  எஸ்.என்.எஸ் கல்லூரியின்  பெண்கள் அணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது.

அதோடு, ஆண்களுக்கான இறுதி போட்டியில் ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரியுடன், எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரி மோதியது. இதில் ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது.