கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், கால்நடை ஆய்வாளர் பயிற்சியை உடனடியாக துவங்கி காலி இடங்களை பூர்த்தி செய்யவும், கால்நடை மருத்துவ மேற்பார்வையாளருக்கு அடுத்த கட்ட பதிவு உயர்வு,  கால்நடை ஆய்வாளர் பணியில் இல்லாத மருந்தகங்களில் கால்நடை ஆய்வாளர் பணியிடங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலமெங்கும் 10 மண்டலங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

கோவை மண்டல உண்ணாவிரத போராட்டத்திற்கு சங்க மாவட்டச் செயலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட செயலர் நசீர். திருப்பூர் மாவட்ட செயலர் செந்தில்குமார், நீலகிரி மாவட்ட செயலர் கிருஷ்ணகுமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தை ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் சங்க தலைவர் சின்னுச்சாமி துவங்கி வைத்து தவக்க உரையாற்றினார்.