மின் கட்டண உயர்வை கண்டித்து மனு கொடுக்கும் போராட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர்,  ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பீக் அவர் உட்பட தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதோடு முதலமைச்சருக்கு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.  அதுமட்டுமில்லாமல்  கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு  மாவட்டங்களில் கதவடைப்பு போராட்டத்தையும் மேற்கொண்டிருந்தனர்.

இருப்பினும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அதோடு தமிழக அரசு உடனடியாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்  வருகின்ற 16ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.