5 ஆண்டில் 3.5 லட்சம்..சேமிப்பு முதலீடாக வேண்டும்!

postel

மாதந்திர சம்பளத்தில் இருந்து ஒரு சிறு தொகையை சேமிக்க திட்டமிடுகிறீர்களா? உங்களுக்காக மத்திய அரசு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

நம்மில் பலருக்கு சேமிக்கும் பழக்கமே இல்லாமல் இருக்கிறது. சிறு சேமிப்பு பெரிய முதலீட்டை உருவாக்கம். மாத பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்புக்காக என்று எடுத்து வைக்க வேண்டும். சேமிப்புக்காக மாதம் இரண்டாயிரம் ரூபாய் ஒதுக்கினால் போதும். ஐந்து ஆண்டில் மூன்றரை லட்சம் வரை சேமிக்க முடியும். அது எப்படி சாத்தியம் என்ற கேள்வியா?

தபால் நிலையங்களில் ஐந்து ஆண்டு ஆர்.டி-க்கான(Recurring Deposit) வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. முந்தைய வட்டி விகிதமான 6.5 விழுக்காட்டில் இருந்து தற்போது 6.7 விழுக்காடாக உயர்ந்துள்ளது. எதிர்கால திட்டமிடலுக்காக சேமிப்பு எவ்வளோ முக்கியமோ அதே அளவிற்கு முதலீடு செய்வதும் அவசியம். அதுவும், நாம் செய்யும் முதலீட்டு பாதுகாப்பாகவும், பண வீக்கத்திற்கு ஏறார்போல் இருந்தாக வேண்டும்.

அப்படியாக, தபால் நிலையங்களில் ஆர்.டி-யில் நீங்கள் மாதம் ரூ.2,000ம் முதலீடு செய்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்வோம். ஆண்டுக்கு ரூ.24,000ம் என ஐந்து ஆண்டுக்கு ரூ.1,20,000ம் வரும். இந்த தொகைக்கு ஆண்டு 6.7% விழுக்காடு வட்டியை சேர்த்து இந்து ஆண்டில் ரூ.1,42,723 கிடைக்கும்.

இதே ஆர்.டி திட்டத்தில் மாதம் ரூ.3,000ம் சேமித்தால் ஆண்டுக்கு ரூபாய் 36,000ம், ஐந்து ஆண்டுகளில் ரூ.1,80,000 செந்திருக்கும். இதற்க்கு 6.7 சதவீதம் வட்டி கணக்கிட்டால் ஐந்து ஆண்டுகளில் முதலீட்டு தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.2,14,097 கிடைக்கும். அதேபோல், மாத்திற்கு ரூபாய் 5,000ம் என வட்டியுடன் சேர்த்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 3,56,830 ரூபாயாக பெருகியிருக்கும்.