சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பு!

2024 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற பதவிக் காலங்கள் வருகின்ற ஜனவரி மாதம் முதல் வாரத்திற்குள் முடிவடைய இருக்கின்றன. இதனால் நடப்பாண்டின் இறுதிக்குள் ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே மத்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த முறை போலவே ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனவும்,  சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவும் எனவும் அறிவித்துள்ளதானர்.
இந்நிலையில் தற்போது ஐந்து மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை மத்திய தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது.  23 நவம்பர் 2023 – ராஜஸ்தான், 7  மற்றும் 17  நவம்பர் 2023 -சத்தீஸ்கர், 7 நவம்பர் 2023 – மிசோரம், 30 நவம்பர் 2023- தெலுங்கானா, 17 நவம்பர் 2023 – மத்தியப் பிரதேசம் ஆகிய தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.