ஏ ஷார்ட் ஹிஸ்டரி ஆப் ‘வால்மார்ட்’!

walmart

‘வால்மார்ட்’ உலகின் மிகப்பெரிய சில்லறை விற்பனை அக்காடி பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திடாத விற்பனை அங்காடி.

இந்தியாவின் பிரபலமான இனையதள வழியாக பொருட்களை விற்பனை செய்யும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவிகித பங்குகள் தற்போது வால்மார்ட் கையில் இருக்கிறது. இது எப்படி சாத்தியம். உலகில் சில்லறை விற்பனையில் (retail business) கோலோச்சி நிற்கும் வால்மார்ட் உருவான கதை மிகவும் சுவாரசியம் ஆனது.

வால்மார்ட்டின் கதை 1918 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள கிங்ஃபிஷர் என்ற நகரில் பிறந்த சாம் வால்டன் என்பவரிடம் இருந்து தொடங்குகிறது. அமெரிக்க ராணுவத்தில் தனது 24ம் வயதில் சேர்ந்த சாம் வால்டன் 1943ல் ஹெலன் ராப்சன் என்பவரை மணந்தார். ராணுவத்தில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு தன் மனைவியுடன் நியூபோர்ட், ஆர்கன்சாஸுக்கு குடிபெயர்ந்தார். அப்போது, அங்கிருந்த சில்லறை விற்பனை அங்காடி ஒன்றில் வேலைக்கு சேர்ந்த அவர், வாடிக்கையாளர்களை ஈர்க்க பல புதுமையான விசயங்களை செயல்படுத்த முயற்சி செய்தார். ஆனால், அந்நிறுவனத்தின் முதலாளி இவரது செயலால் கோபம்கொண்டு வேலையிலிருந்து நீக்கினார்.

இதனையடுத்து, 1950ல் வால்டன் நியூபோர்ட் நகரில் இருந்து பென்டன்வில்லுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் டவுன்டவுன் சதுக்கத்தில் வால்டனின் “5&10” என்ற கடையை திறந்தார். சில்லறை விற்பனையில் வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ள தனது யோசனைகளை செயல்படுத்த தொடங்கினார். அதன் முயற்சியால், வால்டன் தனது முதல் வால்மார்ட் கடையை ஆர்கன்சாஸ், ரோஜர்ஸ் நகரில் ஜூலை 2, 1962 ம் ஆண்டு திறந்தார். அப்போது அவருக்கு வயது 44.

5 ஆண்டில் 24 கடைகள்.,விற்பனையில் $12.7 மில்லியன் அதாவது, 105 கோடி 69 லட்சத்து 87 ஆயிரத்து 345 ரூபாய்…எப்படி சாத்தியம் ஆனது..?

தொடரும்.,