‘அமிர்தவர்ஷம் 70’ சுகாதார முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர் அமிர்தா வித்யாலயம் சீனியர் செகண்டரி பள்ளி  கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையுடன் இணைந்து இலவச சுகாதார முகாமை நடத்தியது. மாதா அமிர்தானந்தமயினுடைய 70-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இம்முகாம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மருத்துவக் குழுவினரை ஒருங்கிணைப்பாளர் சிகப்பி வரவேற்றார். முகாமில் பொது மருத்துவம், மகப்பேறு, கண் மருத்துவம் ஆகிய துறையின் சிறப்பு மருத்துவர்கள் சுகாதார ஆலோசனைகள் மற்றும் இசிஜி சேவைகளை வழங்கினர்.

முகாமின் இரண்டாம் பகுதியாக  உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மருத்துவர் விஸ்வகுமார் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில்  ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.