எலக்ட்ரானிக்ஸ் துறையில் தொழில் செய்ய விருப்பமான..? பி.எஸ்.ஜியில் இலவச பயிற்சி

PSG

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் சுயதொழில் தொடங்குவதற்கான தொழில் முனைவோர் சிறப்புப் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் பிக்கி புளோ இணைந்து மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின், மூலம் நிதியுதவியுடன் நடத்துகிறது. 36 நாட்கள் நடைபெறும் பயிற்சி வகுப்பானது அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரையிலும், அதை தொடர்ந்து நவம்பர் 20-ம் தேதி முதல் டிசம்பர் 7 வரை நடைபெறும்.

இதில், எலக்ட்ரானிக்ஸ் துறையில் சுயதொழில் அல்லது வணிகத்தைத் தொடங்க அல்லது ஏற்கனவே உள்ள ஒன்றை வளர்க்க விரும்பும் நபர்களுக்கு, தொழில் முனைவோர் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கு பயிற்சி கட்டணம் இல்லை. பதிவுக் கட்டணம் நபருக்கு ரூ. 1000.

எலக்ட்ரானிக்ஸ் துறையில் திறன் மேம்பாடு தொடர்பிலான சூரிய ஒளி, ரோபாட்டிக்ஸ், மின்சார வாகனம், ட்ரோன் தொழில்நுட்பம், எஸ்டிஎம்32 மைக்ரோகண்ட்ரோலர், சைபர் செக்யூரிட்டி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். மேலும்,

நிதி உதவி திட்டங்கள், நிதி வாய்ப்புகள், தொழில் முனைவோர் மற்றும் தலைமைத்துவ திறன்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், பிஎம்சி, எம்விபி, சந்தைப்படுத்தல், ஜிஎஸ்டி, வணிகத் திட்டம் தயாரித்தல் போன்ற தலைப்புகளை உள்ளடக்கும். திறன் பயிற்சியானது பூசாகோ கலை அறிவியல் கல்லூரி மின்னணுவியல் துறையின் உதவியுடன் நடத்தப்படும். அந்தந்த துறைகளில் நிபுணர்களின் வழிகாட்டுதலோடு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் 25 இடங்கள் மட்டுமே உள்ளன, இந்த நாட்களில் வருகைப் பதிவு கட்டாயம்.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் அல்லது டிப்ளமோ

வயது: 18 – 50 வயது

மின்னஞ்சல்: psgedc@gmail.com, edcpsgcas@psgcas.ac.in