ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அகில இந்தியக் கருத்தரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் வாகனங்களில் முன்னேற்றங்கள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த அகில இந்திய கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு, இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் கோவை மையத்தின் கௌரவ செயலாளர்  கிருஷ்ணமூர்த்தி, கல்லூரி முதல்வர் என்.ஆர் அலமேலு, துணை முதல்வர் கருப்பசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

கல்லூரியின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை உடன் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் (இந்தியா) கோவை மையத்துடன்  இணைந்து இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக புனே டிவைன் எலக்ட்ரானிக்கல் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் சேகர் மலானி  கலந்து கொண்டு, இன்றைய காலகட்டத்தில் எலக்ட்ரிக்கல் வாகனங்களில் ஏற்படும் முன்னேற்றங்கள், வாய்ப்புகள் அவற்றை உருவாக்கும் போது ஏற்படும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வு குறித்து உரையாற்றினார்.

கோவை ஹரிதா மொபிலிட்டி நிறுவனர் பிரசாந்த் குமார் பழனி, கோவை பெரோ எலக்ட்ரிக் செயல்பாடு துறை இயக்குனர் மோதிலால், ராபர்ட் பாஸ் நிறுவனத்தின் மூத்த திட்ட அதிகாரி லோகநாதன் பழனிச்சாமி, கோவை எமோட் எலக்ட்ரிக் நிறுவனர் பிரணவ் செங்கப்பள்ளி , கோவை  ஜெயச்சந்திரன் இண்டஸ்ட்ரீஸ் அதிகாரி சுப்பிரமணி, மேகிலஸ் மோட்டார்ஸ் நிறுவனர் கௌசிக் கண்ணன், சால்ஜர் குரூப் ஆராய்ச்சி பிரிவு மூத்த அதிகாரி பிரவீன் குமார் ஆகியோர்  கலந்துகொண்டு எலக்ட்ரிக் வாகனங்களின் எதிர்கால நோக்கம் , பாதுகாப்பு , தரநிலைகள் மற்றும் கொள்கை வழிகாட்டுதல்கள், ஆற்றல் சேமிப்பில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

இதில், அகில இந்தியா அளவிலிருந்து பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.