ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தின விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமையன்று பொறியாளர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவானது கல்லூரி முதல்வர் உமா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கற்பகம் உயர்கல்வி நிலையத்தின் பேராசிரியர் ஸ்ரீதர் கலந்துகொண்டார்.

விழாவில் கணிப்பொறி துறை தலைவர் கே.ஜெகதீஷ்வரன் வரவேற்புறையாற்றினார். கல்லூரி முதல்வர் உமா தலைமையுரை வழங்கினார். சிறப்புரையாற்றிய ஸ்ரீதர் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அதோடு மாணவர்களுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவின் இறுதியில் மெக்கானிக்கல் துறை தலைவர் சுரேஷ் குமார் நன்றி கூறினார்.