எஸ்.என்.எஸ்., கல்லூரியில் கூடைப்பந்து போட்டி

எஸ்.என்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித் துறை சார்பில் ‘எஸ்.என்.எஸ் கலர்ஸ் டிராபி’ என்னும் கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் கூடைப்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், பிஎஸ்ஜிகேஸ், கேசிடி, காருண்யா பல்கலைக்கழகம் உட்பட 16 அணிகள் கலந்து கொண்டன.

“நாக் அவுட்” கூடைப்பந்து போட்டியாக நடைபெற்ற இதில் எஸ். என்.எஸ். கல்வி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன், தாளாளர் ராஜலெட்சுமி, தொழில்நுட்ப இயக்குநர் நலின் விமல் குமார், தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் மற்றும் கல்லூரியின் முதல்வர் அனிதா, துணை முதல்வர் நரேஷ் குமார் மற்றும் டீன்ஸ் ஆகியோர் பங்கேற்று விளையாட்டு வீரர்களை பாராட்டினர்.