விநாயகருக்கு அர்ச்சனை செய்யும் ரோபோ! கே.பி.ஆர். கல்லூரியில் கொண்டாட்டம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமையன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ரங்கோலி கோலங்கள், உறியடி, கயிரிலுத்தல் போட்டியென மாணவர்கள் உற்சாகமாக விழாவை கொண்டாடினர்.

அதோடு மாணவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும்படி பொறியாளர் தினத்தின் கொண்டாட்டமும் நடைபெற்றது.

மாணவர்களால் வரையப்பட்ட 100 க்கும் மேற்பட்ட விநாயகர் ஓவியங்கள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்களின் கவனத்தை ஈர்க்கும்படி அமைந்தது. சுற்றுப்புறதிற்கு கேடுவிளைவிக்காத வகையில் களிமண், மைதாமாவு, மரக்கட்டை போன்றவற்றினால் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

மெக்கட்ரானிக்ஸ் துறை மாணவர்களால் உருவாக்கப்பட்ட ரோபோ விநாயகருக்கு தீப ஆராதனை காட்டியது விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும்படி அமைந்தது.