புதியப் படங்களில் ஹிட்டாகும் பழைய பாடல்கள்

பழைய பாடல்களை இன்றைய இயக்குநர்கள் முக்கியமான காட்சிகளில் பொருத்தி ரசனையை உருவாக்க முனைகிறார்கள். அதனால் அந்த பாடல்களும் பலவருடங்கள் கழித்து மீண்டும்  ஹிட்டாகி வருகிறது.

அக்டோபர் 19-ம் தேதி வெளியான விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படத்தில் வரும்  காஃபி ஷாப் சண்டைக்காட்சிக்கு முன் வரும் ‘கரு கரு கருப்பாயி’ பாடல், விஜய்யின் நடனத்தோடு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்தது.  2000-ம் ஆண்டு வெளியான ‘ஏழையின் சிரிப்பில்’ இடம்பெற்றுள்ள இந்த பாடல் தற்போது சோசியல் மீடியாக்களில் தீயாய் பரவிவருகிறது.

மேலும், 1995 யில் வெளியான ‘பசும்பொன்’ படத்தில் வரும் ‘தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் பாடலையும் லோகேஷ்கனகராஜ் ‘லியோ’வில் பயன்படுத்தியிருப்பது ரசிகர்களுக்கு  விருந்து படைத்தது. லோகேஷ் கனகராஜ் தனது முந்தைய படங்களிலும் இது போன்ற பழைய பாடல்களை பயன்படுத்தி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதேபோல நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் 1999-ம் ஆண்டு வெளியான ‘Taal’ படத்தின் ‘தால் சே தால் மிலா’ (Taal Se Taal) பாடலை பயன்படுத்தியிருந்தார்கள். இது ஒரு ட்ரெண்டை உருவாக்கி பலரது ரிங்க்டோனாக மாறியது. அதேபோன்று ‘மார்க் ஆண்டனி’ படத்திலும் ‘எட்டுபட்டி ராசா’வில் இடம்பெற்ற ‘பஞ்சு மிட்டாய் சேல கட்டி’ பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தனர். ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் கூட, ஒரு காட்சியில்  ‘பாட்டு பாடவா’ பாடலில் ஷாருக்கானின் சிறிய நடனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இப்படி பெரிய வெற்றியை கொடுத்த ஜெயிலர், ஜவான், மார்க் ஆன்டனி, லியோ ஆகிய படங்களில் பழைய பாடல்கள் இடம்பெற்று புதுவித ட்ரண்டாக மாறிவருகிறது.