
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடலில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற வேண்டியது அவசியம். நாம் சுவாசிக்கும் காற்று முதல் உணவு வரை அதீத நச்சுக்கள் நம் உடலில் கலந்துள்ளன. இதனை இயற்கையாகவே வெளியேற்றுவதற்கு உதவுகிறது டீடாக்ஸ் வாட்டர். இந்த நீர் சார்ந்த பானங்கள் நம் உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றவும், கலோரி எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.
டீடாக்ஸ் வாட்டர் என்றால் என்ன?
டீடாக்ஸ் வாட்டர் என்பது உடலில் குவிந்துள்ள நச்சுகளை அகற்றுவதாகும். “நீரேற்றத்திற்குத் தண்ணீர் மிகவும் அவசியம் மற்றும் உடலில் உள்ள அனைத்து நச்சுகளையும் வெளியேற்றுகிறது. அதன் வகையில், ஆரோக்கிய நலன்களுக்காக பழங்கள், காய்கறிகள் அல்லது மூலிகைகள் சேர்த்த டீடாக்ஸ் வாட்டரையும் எடுத்து கொள்வது சிறந்தது.
இந்த டீடாக்ஸ் வாட்டரில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன. குறிப்பாக எடை குறைப்பு, உடலின் pH சமநிலையைப் பராமரித்தல் , செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தல் , நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் மற்றும் சருமத்தை வெண்மையாக்கவும் பிரகாசமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
5 வகையான டீடாக்ஸ் வாட்டர்
எலுமிச்சை – வெள்ளரி டிடாக்ஸ் வாட்டர்
வெள்ளரி, எலுமிச்சை மற்றும் புதினா இலை ஆகியவை தண்ணீரில் சேர்க்க வேண்டும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தண்ணீரில் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறது.
இஞ்சி – மஞ்சள் டிடாக்ஸ் வாட்டர்
தண்ணீரில் நறுக்கிய இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் எலுமிச்சை சேர்த்து பருகலாம். இஞ்சி ஒரு சிறந்த செரிமான உதவி என்பதால் ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
பெர்ரி டிடாக்ஸ் வாட்டர்
வைட்டமின், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ள பெர்ரி மற்றும் எலுமிச்சை துண்டுகளைத் தண்ணீரில் சேர்த்து எடுத்து கொள்ளலாம்.
புதினா – தர்பூசணி டிடாக்ஸ் வாட்டர்
தர்பூசணி துண்டுகள், புதிய புதினா இலைகள் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை தண்ணீரில்சேர்த்து எடுத்து கொள்ளலாம். தர்பூசணியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
மாதுளை – புதினா டிடாக்ஸ் வாட்டர்
தண்ணீரில் மாதுளை மற்றும் புதினா இலைகளை சேர்த்து எடுத்து கொள்ளலாம். புதினா செரிமான பண்புகளுக்கு பெயர் பெற்றது மற்றும் மாதுளையில் பாலிபினால்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் உடலை சீராக வைக்க உதவுகிறது.
டிடாக்ஸ் வாட்டர் நன்மைகள்
- டீடாக்ஸ்உடலில் ஓடும் ரத்தத்தை சுத்திகரித்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
- உடல் நச்சை வெளியேற்றும் பணி செய்யும்உறுப்புகளைச் சுத்தம் செய்யும். குறிப்பாக கல்லீரல், சிறுநீரகம், குடல், நுரையீரல், நிணநீர், சருமம் போன்றவற்றைச் சுத்தம் செய்யும்.
- உடல்இடையை குறைத்து, உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது.
- டிடாக்ஸ்வாட்டரில் கொழுப்பு சத்து இல்லாததால், உடலில் உள்ள கலோரிகளை குறைகிறது.
- உடலுக்கு போதுமானநீர்சத்து வழங்குவதால், உடலை ஆற்றலுடன் சுறுசுறுப்பாக வைக்கிறது.