கார்டு இல்லாமல் தற்போது ஏடீஎம் யில் பணம் எடுக்கலாம்

யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை 2017 ல் 9.36 மில்லியனாக இருந்தது. இது தற்போது   9,415 மில்லியனாக அதிகரித்துள்ளது. தள்ளுவண்டி முதல் ஷாப்பிங் மால் வரை அனைத்திற்கும் கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் என யுபிஐ பரிவர்த்தனைகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வசதி மக்கள் மத்தியில் பிரபலமாகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் உள்ளது.

ஏடிஎம் இயந்திரத்தில் வங்கி சேவை மூலம் டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் எடுத்து வருகிறோம். இந்நிலையில் ‘யுபிஐ’ யைப் பயன்படுத்தி ‘ஏடீஎம்’-ல் பணம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன்.

இதுகுறித்த வீடியோ ஒன்றை பின்டெக் துறையில் பிரபலமான ரவி சுடான்ஜனி தனது x தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்த புதிய பிஎச்ஐஎம் மற்றும் யூபிஐ கட்டமைப்பில் இயங்கும் ஒரு ஏடிஎம் மெஷின் எப்படி இயங்குகிறது என மும்பையில் நடந்த குளோபல் பின்டெக் ஃபெஸ்ட்-ல் காட்டியுள்ளார்.

இதுவரையில் இந்த புதிய ஏடிஎம் பொது சந்தையில் பயன்பாட்டிற்கு வரவில்லை. மேலும் இந்த ஏடிஎம்மில் தற்போது பிஎச்ஐஎம் செயலி மட்டுமே பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். விரைவில் கூகுள் பெ, போன் பெ, பெடீஎம் போன்ற பிற யூபிஐ செயலிகளும் பயன்படுத்தும் அளவுக்கு மேம்படுத்தப்பட உள்ளது.