உலகத்தரம் வாய்ந்த கல்வியைக் கொடுப்பதே கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் நோக்கம்

– கே.பி.ஆர். நிறுவனத்தின் தலைவர் இராமசாமி

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழாவுடன் தொடங்கியது.

சமீபத்தில் தமிழ் நாடு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு  முடிவடைந்த நிலையில் கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடைபெற்றது.

கே.பி.ஆர். நிறுவனத்தின் தலைவர் இராமசாமி தலைமை பொறுப்பேற்று நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தார். அவர் பேசுகையில், உலகத்தரம் வாய்ந்த கல்வியைக் கொடுப்பதே கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் முக்கிய நோக்கம் என கூறி மாணவ மாணவிகளை வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராகப் பிரபல உயர்கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பொறியியலால் வளர்ச்சியடைந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் இனிவரும் காலங்களில் அதன் முக்கியத்துவம் பற்றிப் பேசினார். இது மட்டுமின்றி, எதிர்வரும் காலங்களை எதிர்கொள்ள வகுப்பறைக் கல்வி மட்டுமல்லாமல் திறமைகளை அதிகரித்துக் கொள்ளக் கல்லூரி துணை புரியும் என்றார்.

இதை அடுத்து, கல்லூரியின் முதல்வர் இராமசாமி, கல்லூரியில் உள்ள முக்கிய வசதிகளான ஆய்வகங்கள், மற்றும் செயல் முறை கல்வி மையங்கள், அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது எனப் பேசினார். மேலும் நான்கு ஆண்டு பொறியியல் கல்விக்குப் பின் வேலைவாய்ப்பு, உயர் கல்வி மேற்கொள்ள, மற்றும் தொழில் முனைவோராக இக்கல்லூரி ஒரு தளமாக அமையும் என உறுதியளித்தார்.

மேலும், தலைமை செயல் அதிகாரி நடராஜன் பேசுகையில், இக்கல்லூரி தொழில்துறை சார்ந்த கல்லூரியாகச் செயல்பட்டு படிப்பறிவிற்கும் நிஜ உலகத்திற்கும் ஒரு பாலமாக அமையும் என்றார்.