விநாயகர் சதுர்த்திகாக தயார் நிலையிலுள்ள பிள்ளையார் சிலைகள்

விநாயக பெருமானின் பிறப்பை கொண்டாடும் பண்டிகையான விநாயகர் சதூர்த்தியானது இந்த வருடம் செப்டம்பர் 18 ம் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி நெருங்கிய நிலையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக தயார் நிலையில் உள்ளது.

இது குறித்து செல்வபுரத்தில் அமைந்துள்ள ராஜவல்லி சண்முகம் ஆர்ட்ஸ் யின் சிற்பகலைஞர்கள் கூறியதாவது ஓவ்வொரு வருடமும் ஆயுதபூஜை அன்று சிற்ப பணிகள் தொடங்கப்பட்டு வருடம் முழுவதும் இந்த சிற்ப பணிகள் நடைபெறும். அதிகமான சிலைகள் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி போன்ற பண்டிகைகாலங்களில் அதிகமான சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி நெருங்கிய நிலையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. 2 இன்ச் முதல் 2 அடி வரை களிமண்ணாலும் 2 அடி முதல் 12 அடி வரை காகிதகூலாலும் இங்கு விநாயகர் சிலைகள் தயாரிக்கபடுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் கோவை மட்டுமில்லாமல் ஈரோடு கரூர் போன்ற மாவட்டங்கள் வரையிலும் விற்பனை செய்யபடுகின்றன என்று கூறினர்.