ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவிகள் ஓணம் பண்டிகையை அத்திப்பூ கோலமிட்டுக் கொண்டாடத் தொடங்கினர்.

மேலும், திருவோணத்தின் அடையாளமான பூக்கோலத்தோடு, கயிறு இழுக்கும் போட்டி, திருவாதிரை நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் செண்டை மேளம் இசைக்கப்பட்டது.

கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் ஆரவாரத்துடன் ஓணம் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.