பழங்கள், காய்கறிகளை தோலுடன் சாப்பிடலாமா ?

பழங்கள் மற்றும் காய்கறிகள் உண்பதற்கு முன்பு  அதன் தோல்களை  உரித்து விடுவோம். ஆனால், அதற்கு அவசியம் இல்லை. பழங்களின் தோல்களில் முக்கியமான சத்துக்கள் இருக்கலாம்.

பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் பல்வேறு வித சேர்மங்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நிறைந்துள்ளன.

காய்கறிகள் மற்றும் பழங்களை எடுக்க வில்லையென்றால்  இதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்  உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கும். உலக முழுவதும்  ஆண்டுக்கு 39 லட்சம் உயிரிழப்புகள் போதுமான காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ளாததால் ஏற்பட்டதாக 2017 இல் உலக சுகாதார அமைப்பு கூறியது.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி தினசரி 400 கிராம் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை அவற்றின் தோலுடன் சாப்பிடுவது, இந்த பிரச்னைக்கு உதவுமா?

உதவும் என்பதுதான் பதிலாக உள்ளது.

உதாரணமாக, விட்டமின் சி, ரிபோஃப்ளேவின், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுக்கள் உள்ளிட்டவை ஏழு வகையான வேர் காய்கறிகளில் உள்ளது.

அவை பீட்ரூட், கடுகு தாவரம், கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முள்ளங்கி, இஞ்சி மற்றும் உருளைக்கிழங்கு.

தோலில் உள்ள சத்துக்கள்

தோல் உரிக்கப்படாத ஆப்பிளில் தோல் உரிக்கப்பட்ட ஆப்பிளை விட 15% விட்டமின் சி, 267% விட்டமின் கே, 20% கால்சியம், 19% பொட்டாசியம், 85% நார்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது என்று அமெரிக்க வேளாண் துறை தெரிவிக்கிறது.

சில பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்களை உரிப்பதற்கு  ஏற்காது . ஏனென்றால் , அவை சுவையாகவோ அல்லது சாப்பிட ஏற்றதாகவோ இருக்காது.

உதாரணத்திற்கு வாழைப்பழம், ஆரஞ்சு, தர்பூசணி உள்ளிட்ட பூசணி வகைகள், அன்னாசிப்பழம், மாம்பழம், அவக்காடோ, வெங்காயம் மற்றும் பூண்டு உள்ளிட்டவை.

மேலும், அவற்றின் தோல்களை உரித்து மட்டுமே உணவு வகைகளை தயார்செய்ய முடியும்.

ஆனால், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், கிவி மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை தோல்களை உரிக்காமலேயே சாப்பிட முடியும்.

ஆனால்  அவற்றின் தோல்களையும் மக்கள் உரித்தே சாப்பிடுகின்றனர்.

 

-பா .கோமதிதேவி