இன்னர் வீல் கிளப் சார்பில் போதை பொருள் ஒழிப்பு கருத்தரங்கம்

கோவை இன்னர் வீல் கிளப் சார்பாக மருத்துவ முகாம், கல்வி உதவி தொகை வழங்குவது,சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இதே போல தற்போது அதிகரித்து வரும் போதை பொருள் கலாச்சாரத்தை ஒழிக்கும் வகையில் விழிப்புணர்வு,பேரணி,மற்றும் கருத்தரங்குகளை நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக கோவை இன்னர்வீல் கிளப் சார்பாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. நவ இந்தியா பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதில் மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பள்ளியில் போதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிந்து, போதைப் பழக்கத்தின் தீமையை அவர்களுக்கு உணர்த்துவது, காவல் துறைக்கு தகவல் தருவது போன்ற ஆலோசணைகள் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

இன்னர் வீல் கிளப் புவனா சதீஷ் ஒருங்கிணைத்த இதில்,கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன்,மற்றும் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் சண்முகம், சந்திஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், தற்போது பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக கல்லூரி மாணவர்களிடையே போதைப் பழக்கங்கள் அதிகரித்து வருவதாகவும், இதனை ஒழிப்பதற்கு பள்ளி கல்வி மற்றும் காவல்துறை,மாநகராட்சி இணைந்து விழிப்புணர்வு செய்து வருவதாக கூறினார். குறிப்பாக போதை பொருள் விற்பனை கும்பல்களை தொடர்ந்து கைது செய்து வருவதாக கூறிய அவர்,இது போன்ற சட்ட விரோத கும்பல்களை அடையாளம் காண போலீஸ் ப்ரோ எனும் திட்டத்தின் மூலமாக தனி குழுவை ஏற்படுத்தி போது பொருள் விற்பனை செய்யும் கும்பல்கள் குறித்த தகவல்களை மாணவர்களிடம் இருந்து சேகரித்து,மாணவர்கள் இந்த பழக்கத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் இது குறித்து தகவல்கள் தருபவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதில் கோவை இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.