வேப்பமரத்துக்கான ஆசிர்வாதம் ஆடி மாதம்

பிரங்கி முனிவர் தன்னை சிவனுக்கு நிகராக மதிக்க மாட்டிக்கிறாரு, சிவனும் தன்னோடு பக்தர்களுக்கு தான் ஆதரவு குடுக்கிறாருனு சிவன் மேல கோவப்பட்ட பார்வதி தேவி… சிவனை பிரிந்து பூலோகம் சென்றாங்க !

அதுக்கு அப்பறம் சிவனோட உடம்புல சரிபாதி இடம் வாங்கணும்னு பார்வதி தேவி கடுமையான தவம் இருந்திருக்காங்க.

இந்நேரத்தில் ஆடி என்று தேவலோக பெண் சிவனோட தீவிர பக்தர். எந்நேரமும் சிவனை பற்றி தான் நினைச்சிட்டு இருப்பாங்க ! சிவனோடு ஒரு நிமிடமாவது வாழனும், இல்லைனால் அவர் ஒரு நிமிடமாவது தன்னை அன்போட பார்க்கணும்னு ஆசைப்பட்டிருந்தாங்க.

இதைத்தொடர்ந்து, பார்வதி தேவி இப்படி சிவனை பிரிந்து பூலோகம் போய்ட்டாங்களே. சிவனை இனி யாரு பார்த்துப்பாங்கனு கவலை பட்ட ஆடி. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு பாம்பு உருவம் எடுத்து தேவ வனங்களோடு காவலையும் மீறி சிவனை பார்ப்பதற்கு கைலாகத்திற்கு போய்ட்டாங்க.

பார்வதி போல உருவம் எடுத்து சிவனோடு நெருங்கி இருக்க முயற்சித்தாங்க. சிவனுக்கு ஏதோ தப்பா இருக்குனு தன்னோட நியான திருஷ்டில பாக்குறாரு ..

அப்போது தெரிகிறது ….வந்திருக்கிறது என்னுடைய தேவி கிடையாது. தேவலோக பெண் ஆடி – னு. இதை கண்டுபிடுச்ச சிவப்பெருமான் கோபத்தோடு ருத்ர அவதாரம் எடுத்து தன்னுடைய சூலாயுதத்துல அந்த தேவலோக பெண் ஆடிய வதம் செய்ய போயிருக்காரு .

அப்போது சூலாயுதத்து மேல் இருக்கும் தீ ஆடி மேல் பட்டதும் ஆடி புனித அடைந்திட்டாங்க . பிறகு ஆடி தான் செய்த தவறை உணர்ந்து சிவனிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருந்தார்.

அதற்கு சிவபெருமான் நீ அனுமதி இல்லாமல் கைலாயத்திற்கு வந்ததே தவறு . அதுவும் என் மனைவி இல்லாத நேரத்தில் அவளை மாதிரியே உருவம் எடுத்து என்னிடமே நெருக்கமா இருக்க விரும்பிருக்கிறாய். அதனால் நீ பூலோகத்துல கசப்பு தன்மை கொண்டு நீ பிறப்பாய் . எல்லாரும் உன்னை வெறுத்து ஒதுக்கப்படுவாய் என்ற சாபம் கொடுத்தார் சிவபெருமான்.

இதனை கேட்ட தேவலோக பெண் சிவனிடம் உங்கள் பார்வை ஒருநிமிடமாவது என்மேல் விழுகணும்னு இப்படி ஒரு தவறு செய்தேன் என்று கூறினால்.

அவள் மேல் இறக்கப்பட்ட சிவபெருமான்; என் மனைவி போல் உருவம் எடுத்து அவளுக்கு சமம்மாக என்னுடன் அமரந்தத்துக்கு ” உனக்கு சக்தியோடு ஆசி முழுவதும் கிடைக்கும் ” .

உன் இலைகள் கசப்பாக இருந்தாலும் பல பிரச்சனைக்கு அற மருந்தா நீ திகழ்வாய். உன்னுடைய பெயர்ல ஒரு மாதம் உண்டாகும். அந்த மாதத்தில சக்தியோட ஆதிக்கம் அதிகரிச்சு காணப்படுவாய்.

ஆடி மாதத்தில உன்னுடைய பங்கு பெரு அளவு தேவைப்படும். அம்மனுக்கு நிகராய் உன்னை எல்லாரும் வழிபடுவாங்க . உன்னுடைய இலைகளை சாப்பிட்டால் பல வியாதிகள் குணமாகும் என்று அதிக வரங்களை கொடுத்தார் சிவபெருமான்.

இதுனால தான் வேப்ப மரமும் ஆடி மாசமும் உருவாகியது