ரூ.1.83 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்!

கோவை, தோலம்பாளையம் கிராமம், திப்பாதேவி கோவில் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு 673 பயனாளிகளுக்கு ரூ.1.83 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இம்முகாமில் தூய்மைப்பணியாளர் நலவாரிய மாநில துணைத் தலைவர் கனிமொழிபத்மநாபன், தோலம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயா செந்தில்குமார், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், ஆத்மா கமிட்டி தலைவர் சுரேந்திரன், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செல்வம், தனித்துணை ஆட்சியர் சமூகப் பாதுகாப்பு திட்டம் சுரேஷ், வேளாண்மை இணை இயக்குநர் முத்துலெட்சுமி, மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன், தனி வட்டாட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) ரங்கராஜன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.