மாநகராட்சி ஆணையாளரின் ஆய்வு பணிகள்!

கோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் பெரியகடை வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் சாலை ஆகிய இடங்களில் ரூ.7 கோடியே 48 இலட்சம் மதிப்பீட்டில், 1.75 கி.மீ.தொலைவிற்கு மோட்டார் இல்லாத வாகன போக்குவரத்து திட்டம் நடைபாதை அமைக்கும் பணி மற்றும் மின்விளக்கு அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, டாடாபாத் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி அறிவியல் பூங்காவின் செயல்பாடுகளையும் பாரிவையிட்டு ஆயுவு செய்தார். இந்த ஆய்வின் போது உடன் செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், கணேசன் ஆகியோர் உள்ளனர்.