66 காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்பு! – ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சர்வீசஸ் போர்டு

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சர்வீசஸ் போர்டு, RBISB டேட்டா சைன்டிஸ்ட்ஸ் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் ஏற்க்கப்படுகின்றன என அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆர்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளமான rbi.org.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பதிவு செயல்முறை ஜூன் 21ஆம் தேதி புதன்கிழமை தொடங்கி ஜூலை 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முடிவடைகிறது.

இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் நிறுவனத்தில் உள்ள 66 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிட விவரங்கள்:

  • டேட்டா சைன்டிஸ்ட் (3 பணியிடங்கள்),
  • டேட்டா இன்ஜினியர் (1 பதவி),
  • டேட்டா இன்ஜினியர் (10 பணியிடங்கள்),
  • ஐடி சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்- தகவல் தொழில்நுட்பத் துறை (8 பணியிடங்கள்),
  • தகவல் தொழில்நுட்பத் திட்ட நிர்வாகி – தகவல் தொழில்நுட்பத் துறை (6 பணியிடங்கள்),
  • நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர (3 பணியிடங்கள்),
  • பொருளாதார நிபுணர் (மேக்ரோ எகனாமிக் மாடலிங்) – (1 பதவி),
  • டேட்டா அனலிஸ்ட் (5 பணியிடங்கள்),
  • ஆய்வாளர் (அனலிஸ்ட்) – 8 பணியிடங்கள்,
  • மூத்த ஆய்வாளர் (சீனியர் அனலிஸ்ட்) – (3 பணியிடங்கள்),
  • ஐடி – சைபர் செக்யூரிட்டி அனலிஸ்ட் (8 பணியிடங்கள்),
  • கன்சல்டன்ட் அக்கெளவுன்டிங் (3 பணியிடங்கள்),
  • ஐ.டி ப்ராஜெக்ட் அட்மினிஸ்ட்ரேட்டர் – டிபார்ட்மென்ட் ஆஃப் கவர்ன்மென்ட் அண்ட் பேங்க் அக்கெளன்ட்ஸ் (3 பணியிடங்கள்),
  • கன்சல்டன்ட் அக்கெளன்டிங் / டேக்ஸ் (1 பதவி)
  • பேங்க் அனலிஸ்ட் (1 பதவி), லீகல் (சட்டம்) – (1 பதவி),
  • ஐடி சிஸ்டம்ஸ் & டிஜிட்டல் பேமெண்ட்ஸ் (1 பதவி)