கே.ஐ.டி கல்லூரியில் தொழில் எதிர்பார்ப்புகள் குறித்த கருத்தரங்கம்

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) முதலாமாண்டு மாணவர்களுக்கு தொழில் எதிர்பார்ப்புகள் என்ற ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டிசிஎஸ் (தமிழ்நாடு & புதுச்சேரி) வளாக மனிதவளத் தலைவர் விக்னேஷ் பரமசிவம் கலந்துகொண்டு பேசுகையில்: தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு துறையில் 50 க்கும் மேற்ப்பட்ட வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்கு பொறியியல் துறை எவ்வாறு உதவுகிறது என்றும், இன்றைய காலகட்டத்தில் பொறியியல் துறையின் அசாதாரண வளர்ச்சியைப் பற்றியும் விளக்கி கூறினார்.

அதுமட்டுமின்றி தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள கட்டமைப்புகளை மாணவர்கள் புரிந்து கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணைத்தலைவர் இந்து முருகேசன், முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், டீன் – வேலைவாய்ப்புத்துறைத் தலைவர் மகாலட்சுமி, அறிவியல் மற்றும் மனிதநேயம் துறைத்தலைவர் யமுனா, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.