சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சபரிமலைக்கு விமானத்தில் செல்லும் பக்தர்கள் தங்களுடன் தேங்காயை எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்புப் பிரிவு அனுமதி அளித்துள்ளது.

விமானத்தில் பயணம் மேற்கொள்ளும்போது, எளிதில் தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் தேங்காயை தங்களுடன் பயணிகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்றாக, சரக்குப் பகுதியில் வைத்து எடுத்துச் செல்ல அனுமதிஅளித்துள்ளது.

இந்த நிலையில் , மண்டல-மகர விளக்கு பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இருமுடியை தங்களுடனேயே எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்புப் பிரிவு அனுமதி அளித்துள்ளது.

இது, அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதிவரை அமலில் இருக்கும் என்றும், எக்ஸ்ரே, வெடிபொருள் பரிசோதனை, நேரடி பரிசோதனை ஆகியவற்றை விமான பாதுகாப்புக் குழுவினர் மேற்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.