கே.ஐ.டி கல்லூரியில் தொழில்முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கம்

கலைஞர் கருணாநிதி தொழில் நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) “பட்டப்படிப்பு நிறைவு செய்யும் மாணவர்களுக்கான தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஸ்ரீ ஈஸ்வர் இக்னைட் ஸ்டார்ட்அப் ஆக்ஸிலரேட்டர் திட்ட அசோசியேட் தலைவர் விவேக் குமார் கலந்து கொண்டு உலகளாவிய பொருளாதாரத்தில் தொழில்முனைவோரும் மற்றும் ஜி.எஸ்.டியும் உள்ளிட்ட பல தலைப்புகளில் உரையாற்றினார்.

இக்கருத்தரங்கில் தேசிய சிறு தொழில்கள் கழகம் லோன் சிண்டிகேஷன் செல் உதவி மேலாளர் சரவண கிருஷ்ணன், கல்லூரியின் முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.