கோவையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவையில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சமீரன் புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

2023 ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்து மாவட்ட ஆட்சியர் சமீரன், அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சமீரன், இந்த வாக்காளர் பட்டியலில் கோவை மாவட்டத்தில் ஆண்கள் 14 லட்சத்து 82 ஆயிரத்து 79 பேரும், பெண்கள் 15 லட்சத்து 32 ஆயிரத்து 354 பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தனர் 539 பேர் என மொத்தம் 30 லட்சத்து 14 ஆயிரத்து 972 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

மேலும் 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம். அதேபோல வரைவு வாக்காளர் பட்டியல் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் உள்ளிட்டவைகளுக்கு வருகின்ற டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் வாக்குப்பதிவு மையங்களில் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என தெரிவித்தார்.

மேலும் ஜனவரி வரைக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தவுள்ளோம் எனவும், 40%சதவீதம் ஆதார் இணைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது என குறிப்பிட்டார்.