ஆபத்து நிறைந்த வைரஸ் ஆப்கள்

உங்களின் ஆண்ட்ராய்டு போன்களில் இருக்கும் ஆபத்தான சில வைரஸ் நிறைந்த ஆப் பற்றிய விவரங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

இது உங்களின் போன் உள்ளே இருந்தால் உடனடியாக அவற்றை டெலிட் செய்யுங்கள்.

உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தும் ஒரு ஆப் என்றால் அதுGoogle Play Store தான். இந்த ஆப் உள்ளே உங்களுக்கு தேவையான Games, Entertainment, Social Apps போன்ற பலவகையான ஆஃப்கள் நிறைந்திருக்கும்.

ஆனால் இந்த Store உள்ளே இருக்கும் ஆப் அனைத்தும் உண்மையான பாதுகாப்பான ஆஃப்கள் அல்ல. இவற்றில் பல ஆபத்து நிறைந்த ஆப் உள்ளடங்கியுள்ளது. இந்த ஆப் நீங்கள் டவுன்லோட் செய்தால் உங்களை சில ஆபத்தான வலைத்தளங்களுக்கு அல்லது உங்களின் தனிப்பட்ட டேட்டா போன்றவற்றையும் திருடிவிடும்.

அப்படி ஆபத்தான சில ஆஃப்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆப் நீங்கள் தெரியாமல் டவுன்லோட் செய்தால் உடனடியாக அதனை டெலிட் செய்து உங்களின் டேட்டா மற்றும் ஸ்மார்ட்போனை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

இந்த ஆப் அனைத்தும் Android/Trojan. HiddenAds. BTGTHB எனும் வைரஸ் நிறைந்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இந்த ஆஃப்கள் அனைத்தும் 1 மில்லியன் டவுன்லோட் பெற்றுள்ளன.