முடி உதிர்தலுக்கு கொய்யா இலை தீர்வு

கொய்யா இலை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர், பல ஆண்டுகளாக மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் பாரம்பரிய மருத்துவத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக காணப்படுகிறது.

இந்த தேநீர் தயாரிக்க, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், சிறிது தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் இலைகளை ஊற வைக்கவும். பின்பு கொய்யா இலை தேநீர் தயார்!  இது  செய்வது  மிகவும் எளிமையானது.

கொய்யா இலைகளில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது, எனவே, நீங்கள் லேசான சளியால் பாதிக்கப்பட்டிருந்தால் கொய்யா இலை தேநீர் குடிக்கலாம்.

இது சுவாச பாதை, தொண்டை மற்றும் நுரையீரலில் இருந்து சளியை அகற்ற உதவும். மேலும், தேநீர் உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது.

சருமத்துக்கு:

உங்கள் தோலின் அமைப்பை மேம்படுத்தவும், முகப்பரு வடுக்களை அகற்றவும், கொய்யா இலை சிறந்ததாக இருக்கும். கொய்யா இலைகளை நசுக்கி அதன் சாற்றை, முகத்தில் தடவவும். சில நாட்களில் நீங்களே வித்தியாசத்தை பார்ப்பீர்கள்!

முடிக்கு:

முடி உதிர்தல் மற்றும் அளவு குறைவதால் அவதிப்படுபவர்களுக்கு, கொய்யா இலைகள் நல்ல தீர்வு. நீங்கள் இலைகளை வேகவைத்து உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம், அதிலிருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் கூந்தலுக்கு அதிசயங்களைச் செய்யும். மசாஜ் செய்யும் போது தண்ணீர் சூடாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

 

– பா. கோமதி தேவி