பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தினத்தை யொட்டி பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ், சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் நிறுவகத்தின் இயக்குனர் கவிதாசன் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் முன்னாள் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சங்கரன், மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

இந்த விழாவில் முன்னாள் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சங்கரன் குறுகிராம் சிறுகுறிப்பு புத்தகத்தை மாணவர்களுக்காக வெளியிட்டார்.

இதையடுத்து சிறப்பு விருந்தினர் கவிதாசன் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும், மாணவர்களுக்கு ஆசிரியரின் கற்பித்தல் வழியையும் பற்றி  உரையாடினார். மாணவர்களை உற்சாகிக்கும் வகை மட்டுமல்லாமல் தன்னம்ப்பிகை ஊக்குவிக்கும் வகையில் பல சொற்பொழிவுகளையும் எடுத்து உரைத்தார்.

இன்றைய பட்டதாரி நாளை படிப்பதை  நிறுத்தி விட்டால் அவன் படிக்காதவன் ஆகிவிடுவான்” என்று கல்வியின் முக்கியதுவத்தையும் பற்றியும் சிறப்பித்தார்.